Posts

நோக்கம்

நூலகம் நோக்கம் : தாய்மொழியில் வாசிக்கப்   பழகுதல் . குறிக்கோள் : நல்ல புத்தகங்களை வாங்கி அறிமுகம் செய்வது , படிக்கும்/ வாசிக்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பது. பாட ப் புத்தகம் தவிர தமிழ் மொழியில் மாணவர்களுக்கு படக்கதைகள், குழந்தை இலக்கியங்கள் , வேடிக்கை க் கதைகள் , சிறுகதைகள் , குறுநாவல்கள் , புதினங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்த நூலகம் வழிவகுக்கும் .   நல்ல தரமான மொழியை நல்ல புத்தகங்களிலிருந்து   மாணவர்கள் உள்வாங்குவார்கள். ஓய்வு நேரங்களில் பெற்றோருக்குப் படித்துக்காட்டுவார்கள். அமெரிக்க வாழ்வில் நாங்கள் மிகவும் ரசித்துப்பார்ப்ப தில் ஒன்று   நல்ல நூலகங்களும் குழந்தைகளின் வயதிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ப தாராளமாக புத்தகங்கள் கிடைப்பதும். அம்புலிமாமா, டிங்கிள், சிறுவர்மலர், தங்க மலர் கோகுலம் போன்ற வார மாத இதழ்களை படித்து வளர்ந்த தலைமுறைக்கு தூலிகா, பிரதம், நேசனல் புக் டிரஸ்ட் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்கள் இன்னொரு பிள்ளைப்பருவத்திற்கு ஏங்கச் செய்திடும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு வாசித்து மகிழ்வர் .